Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு வீதியில் கிரிக்கெட் விளையாடிய கோஹ்லி!

In கிாிக்கட்
Updated: 07:31 GMT, Sep 11, 2017 | Published: 07:30 GMT, Sep 11, 2017 |
0 Comments
5479
This post was written by : Vithushagan

இலங்கையில் சிறுவர்களுடன் இணைந்து இந்திய  அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு, நாரஹேன்பிட்டி தொடர்மாடி கட்டிடத் தொகுதியில் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் கோஹ்லி ஈடுபட்டமையானது அனைவரையும் குறிப்பாக சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோஹ்லி, இவ்வாறு தொருவோர கிரிக்கெட்டில் சிறுவர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

கோஹ்லியின் செயற்பாடு தற்போது  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் கோஹ்லி சிறுவர்களுடன் இணைந்து விளையாடும் ஒளிப்படமும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அனைத்து வகையான போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனைபடைத்ததுடன் கோஹ்லியும் பல சாதனைகளைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg