Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஜயின் திரைப்படத்தை பின் தள்ளிய விவேகம்

In சினிமா
Published: 07:28 GMT, Sep 11, 2017 |
0 Comments
2679
icon_com
This post was written by : Surenth
Ajith Vivegam

அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய விவேகம் திரைப்படம் ரஜினியின் கபாலி, ராஜமவுலியின் பாகுபலி, விஜயின் பைரவா போன்ற திரைப்படங்களின் சாதனைகளை எல்லாம் மீறி பொக்ஸ் ஒபிசில் வருவாயை ஈட்டியிருக்கிறது என டிரேட் எக்ஸ்பர்ட் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.

ஒகஸ்ட் 24ஆம் திகதி வெளியான நடிகர் அஜித் நடித்து, சிறுத்தை சிவா இயக்கிய விவேகம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டாலும், படம் வெளியாகி இரண்டு வாரம் ஆகிவிட்ட நிலையில் முன்னணி நடிகர்களான ரஜினியின் கபாலி, விஜயின் பைரவா மற்றும் ராஜமவுலியின் பாகுபலி ஆகிய திரைப்படங்களைக் காட்டிலும் பொக்ஸ் ஒபிஸில் வருவாயை ஈட்டி இருக்கின்றது.

ரஜினி நடித்த கபாலி திரைப்படம் சென்னையில் வெளியான முதல் நாளில் 1.12 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ஆனால் விவேகம் 1.21 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது.

முதல் நாள் வசூலில் கபாலியை மட்டுமல்ல, சிங்கம் 3, பைரவா ஆகிய திரைப்படங்களையும் முந்தியுள்ளது. இந்நிலையில் 14 நாள்களில் விவேகம் திரைப்படம் வசூல் செய்துள்ள மொத்த தொகை 157 கோடி ரூபாய் ஆகும்.

பாகுபலி முதல் பாகம் இரண்டு வாரத்தில் ஈட்டிய வசூல் 8.25 கோடி ரூபாய். அதே இரண்டு வாரத்தில் விவேகம் 8.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg