Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – எண்மர் உயிரிழப்பு

In
Published: 07:46 GMT, Sep 11, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டாலஸ் நகரில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

டாலஸ் நகரிலுள்ள வீடொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டினுள் திடீரெனப் புகுந்த இனந்தெரியாத நபரொருவர், அவ்வீட்டிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்று அங்கு உடனடியாக விரைந்த பொலிஸார், இனந்தெரியாத அந்நபரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கும் இடையிலான தொடர்பு தொடர்பில் இதுவரையில் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)