Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

In
Published: 08:13 GMT, Sep 11, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Suganthini

மியன்மாரில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மியன்மாரைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானோர், மத்திய லண்டனில் அமைந்துள்ள மியன்மார் தூதரகத்துக்கு முன்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவத்துக்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவம் காரணமாக அதிகளவான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.

இந்நிலையில், பங்களாதேஷுக்கு சுமார் 3 இலட்சம் பேர் இதுவரையில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் 30 ஆயிரம் பேர் மியன்மாருக்குள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg