Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் தேர்வுக்கு எதிராக வேலூரில் மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்!

In இந்தியா
Updated: 08:56 GMT, Sep 11, 2017 | Published: 08:56 GMT, Sep 11, 2017 |
0 Comments
1270
This post was written by : Ravivarman

நீட் தேர்வுக்கு எதிராக வேலூரில் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று (திங்கட்கிழமை) வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளே இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதா சாவுக்கு நீதி வேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்காத பொலிஸாரை கண்டிக்கின்றோம் என கோஷம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை கடந்த வாரம் முத்துரங்கம் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பழைய பேரூந்து நிலையம் நோக்கி பேரணியாக சென்றவர்களை பொலிஸார் தடுத்து, திருப்பி அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இன்று 3-வது நாளாக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியெங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்ததுடன், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg