Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழ்க்கவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினம்

In இலங்கை
Published: 09:06 GMT, Sep 11, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

தனது எழுத்துக்கள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழ்க்கவி சுப்ரமணிய பாரதியாரின் 95ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு, இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில், இன்று (திங்கட்கிழமை) காலை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். அரசடிச் சந்தியில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதியில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது பாரதியாரின் உருவச்சிலைக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா மற்றும் சின்மயா மிசன் சைத்தன்ய சுவாமிகள், இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா.வாசுதேவக்குருக்கள், ஆறுதிருமுருகன் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்கள் மகாகவியின் பாடல்களை பாடியதன் பின்னர், இந்திய துணைத் தூதுவர் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்.

barathiyar (6) barathiyar (5) barathiyar (7) barathiyar (3) barathiyar (9) barathiyar (8) barathiyar (12) barathiyar (11) barathiyar (1) barathiyar (10) barathiyar (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg