Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்: 28 பேர் கைது!

In இந்தியா
Updated: 09:16 GMT, Sep 11, 2017 | Published: 09:16 GMT, Sep 11, 2017 |
0 Comments
1331
This post was written by : Ravivarman

டெல்லியில் நூதன போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் 28 பேரை டெல்லி பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 57 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழக்ததில் கடுமையான வறட்சி, போதிய வறட்சி நிவாரணம் வழங்காமை, அழிந்த பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு கிமைக்காமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை, கர்நாடகாவில் இருந்து காவிரித் தண்ணீர் பெற்றுத்தர வில்லை, போன்ற கோரிக்கைகளுடன் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 58-வது நாளான இன்று டெல்லியில் தமிழக விவசாயிகள் விவசாயிகளின் ஆடைகளை பிரதமர் மோடி அவிழ்ப்பது போன்று சித்தரித்து போராட்டம் நடத்தினர்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் பெண்கள் தவிர மற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 28 விவசாயிகளை கைது செய்து டெல்லி நாடாளுமன்ற பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg