Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை அணியை மீட்க வருகிறார் அரவிந்த டி சில்வா!

In விளையாட்டு
Updated: 11:36 GMT, Sep 11, 2017 | Published: 11:33 GMT, Sep 11, 2017 |
0 Comments
1208
icon_com
This post was written by : Vithushagan
432596-aravinda-de-silva-gen-700

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட் அணியை மீட்பதற்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அரவிந்த டி சில்வாவின் உதவியை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அரவிந்த டி சில்வாவை சர்வதேச கிரிக்கெட் பிரதானியாக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வாவிற்கு மேலதிகமாக பிரண்டன் குறுப்பு, கிரகம் லேபோய், மஹேல ஜயவர்தன ஆகியவர்களின் உதவிகளையும் இதற்காக பெற்றுகொள்ள தயாராகி வருவதாக இலங்கை கிரிக்கெட் அணி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக  கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் தற்போது அழைப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் அரவிந்த டி சில்வா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னரும் அரவிந்தடி சில்வா பல முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg