Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் – பிரித்தானியா

In
Updated: 09:27 GMT, Sep 11, 2017 | Published: 09:25 GMT, Sep 11, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Suganthini
ballon

பல நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில், தனது ஏவுகணைச் சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ள நிலையில், லண்டனை நோக்கி ஏவுகணைச் சோதனை நடத்தப்படுவதற்கு முன்னர், வடகொரியாவின் அணுவாயுதத்  திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் மைக்கேல் பாஃலூன்  தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின்போது, பிரித்தானியாவின் தலைநகர் லண்டனை தாக்கும் திறனை வடகொரியா கொண்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

லண்டனைத் தாக்கும் திறன் இதுவரையில் வடகொரியாவிடம் இல்லை. இருந்த போதிலும், வடகொரியா தனது ஏவுகணைத் திட்டத்தை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியாவின் செயற்பாடுகள் லண்டனை நோக்கி அமையக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘வடகொரியாவின் அணுவாயுத  மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில், தவாறான செயற்பாடுகள் ஆபத்தானவை. அல்லது, சில விபத்துகள் பாரிய விளைவை உண்டுபண்ணும்’ என்றார்.

ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. ஹைட்ரஜன் எனும் வெடிகுண்டை வடகொரியா பரிசோதித்துள்ளது.

இந்த அணுவாயுதப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் வடகொரியா அறிவித்திருந்தது.
மேலும், வடகொரியாவின் இவ்வாறான செயற்பாடுகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg