Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டம் ஒழுங்கு பிரச்சினை: தமிழக முதலமைச்சர் அவசர ஆலோசனை!

In இந்தியா
Updated: 11:28 GMT, Sep 11, 2017 | Published: 11:28 GMT, Sep 11, 2017 |
0 Comments
1333
This post was written by : Ravivarman

அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவையும் மீறி இன்று போராட்டம் நடத்தி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க சென்னை பொலிஸ் ஆணையாளருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பொலிஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை பொலிஸ் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன், உள்துறை செயலாளர் ஆகியோரை தலைமை செயலகத்துக்கு அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பல்வேறு உத்தரவுகளை பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி இன்று போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மாணவர்களும், போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg