Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் திட்டத்தில் வவுனியாவுக்கு அதிகமான வீடுகள்!

In இலங்கை
Published: 11:38 GMT, Sep 11, 2017 |
0 Comments
1216
This post was written by : Varshini
housing scheme

ஜனாதிபதியால் செயற்படுத்தப்படவுள்ள 65,000 வீட்டுத்திட்டத்தில் வவுனியாவுக்கு அதிகமான வீடுகளை வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், யுத்த பாதிப்பிற்கு உள்ளான வவுனியாவிற்கு அதிகமான வீடுகளை வழங்க வேண்டியதன் தேவையை வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சுட்டிக்காட்டினார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரான ரிசாட் பதியுதீன், வவுனியாவிற்கு தேவையான வீடுகளின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்.

இக் கோரிக்கையை ஒருங்கிணைப்புக்குழு தீர்மானமாக ஏற்று, இத் தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு கடிதம் மூலம் அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg