Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் இடம்பெற்ற நடமாடும் சேவையால் விசனமடைந்த மக்கள்!

In இலங்கை
Published: 12:41 GMT, Sep 11, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Ravivarman
DSC_0108

மன்னாரில் இடம்பெற்ற ‘நிலமெஹெவர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்ட நடமாடும் சேவையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மன்னாரிலும், நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவிலும் நேற்றும், இன்றும் (திங்கட்கிழமை) குறித்த நடமாடும் சேவை இடம்பெற்ற போதும், மக்கள் உரிய முறையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில் குறித்த நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மக்களுக்கு உரிய வகையில் தெளிவூட்டல்களை மேற்கொள்ளாமையினால் குறித்த நடமாடும் சேவையின் போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg