Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இத்தாலியில் அடை மழை – அறுவர் உயிரிழப்பு

In
Published: 12:40 GMT, Sep 11, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Suganthini
italy

இத்தாலியில் தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

வெள்ளப்பெருக்குக் காரணமாக டஸ்கன் கடற்கரையை அண்டிய பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், சில இடங்களில் சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இடி, மின்னலுடன் அடை மழை தொடர்ச்சியாகப் பெய்துவரும் நிலையில், மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன், மேலும் பலத்த காற்று வீசக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

எனவே, பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொண்டு, பாதுகாப்பாக இருக்குமாறும் இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)