Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரு மாநிலத்தவர்கள் இன்னொரு மாநிலத்தவர்களின் தினங்களை கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி

In இந்தியா
Published: 03:38 GMT, Sep 12, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Kemasiya
modinew-kIDD--621x414@LiveMint

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி பிற மாநில பாடசாலைகளில் ‘தமிழ்த் தினம்’ கொண்டாட வேண்டும். ஒரு மாநிலம் இன்னொரு மாநில தினங்களை கொண்டாட வேண்டும். அதை பாடசாலைகளில் பழக்க வேண்டும்  என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றியதன் 125ஆவது ஆண்டுவிழா தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்தள்ளார்.

பாடசாலைகளில் பல்வேறு தினங்கள் கொண்டாடுகிறார்கள். ரோஜா தினம் கூட கொண்டாடப்படுகிறது. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் உள்ளபாடசாலை பிற மாநிலத்தின் கலாசாரத்தையும் கொண்டாட வேண்டும்.

உதாரணமாக அரியானாவில் உள்ள பாடசாலையில் ‘தமிழ்த் தினம்’ கொண்டாடலாம். பஞ்சாபில் உள்ள பாடசாலையில் ‘கேரளா தினம்’ கொண்டாடலாம். அப்போது அவர்களது பாடல்களை பாடி அவர்களை போலவே உடை உடுத்தலாம். இதுபோன்ற கலாசார பரிமாற்றங்கள் அந்த தினத்தை ஆக்கப்பூர்வமானதாக செய்யும். அத்தோடு ஒரே இந்தியா மாபெரும் இந்தியாவை உருவாக்க உதவும் பாடசாலைகளின் இத்தகைய செய்ற்பாடுகள் தான் வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg