Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு ஏற்பாடுகள் திரைப்படத்தை நினைவூட்டியது: டு பிளஸிஸ்

In கிாிக்கட்
Updated: 04:12 GMT, Sep 12, 2017 | Published: 04:11 GMT, Sep 12, 2017 |
0 Comments
3025
This post was written by : Elakkiya

பாகிஸ்தான் சென்றுள்ள உலக பதினொருவர் அணிக்கு நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உலக பதினொருவர் அணியின் தலைவர் டு பிளஸிஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல திரைப்படம் போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் சபையின் ஏற்பாட்டில் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் விளையாடுவதற்காக உலக பதினொருவர் அணி நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் சென்றுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் துணை இராணுவத்தினர் உட்பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த உலக பதினொருவர் அணியின் தலைவரும் தென் ஆபிரிக்க வீரருமான டு பிளஸிஸ், ‘பாதுகாப்பு திட்டமிடல் சிறப்பாக உள்ளது. ஒரு வீரராக அனைவருக்கும் தேவையான அமைதியான மனப்பான்மையை வழங்கியுள்ளது. இதன்மூலம் உறுதி ஏற்பட்டுள்ளது. விமானத்திலிருந்து இறங்கிய அந்த நொடியே நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை விரர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சர்வதேச கிரிக்கட் அணிகள் பாகிஸ்தான் செல்வதற்கு தயங்கிய நிலையில் சர்வதேச கிரிக்கட் சபை உலக பதினொருவர் அணியை தேர்வு செய்து பாகிஸ்தான் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg