Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்: அ.தி.மு.க சட்டத்தில் திருத்தம் (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 10:29 GMT, Sep 12, 2017 | Published: 05:29 GMT, Sep 12, 2017 |
0 Comments
1534
icon_com
This post was written by : Kemasiya
yfrnj frnjyh

அ.தி.மு.க பொதுச் செயலாளா் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதுடன் எதிா்காலத்தில் குறித்த பதவியை நீக்குவதற்கும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(செவ்வாய் கிழமை) காலை அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆரம்பமாகிய பொதுக்குழு கூட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டவை உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறித்த 14 தீர்மானங்களையும் பொதுக்குழு அமைச்சர் உதயகுமார் வாசித்தார். மறைந்த அதிமுக உறுப்பினர்களக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார் பொள்ளாச்சி ஜெயராம். இக் கூட்டத்தில் கீழ் வரும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் அ.தி.மு.க இல் இனி பொதுச் செயலாளர் என்று யாரும் இல்லை,

பொதுச் செயலாளர் பொறுப்பை அம்மா ஜெயலலிதாவிடமே விட்டுவிடுதல்,

இரட்டை இலையை மீட்டெடுத்தல்,

தற்காலிக துணை பொதுச் செயலாளர் சசிகலாவை பதவியில் இருந்து நீக்குதல் மற்றும் அவருக்கு அ.தி.மு.காவில் அங்கத்தும் கொடுத்தல்,

அ.தி.மு.க சட்ட திட்டத்தின் படி அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றுவார்கள்,

ஜெயலலிதா நியமித்த உறுப்பினர்கள் அந்தந்த கட்சியின் பொறுப்புக்களில் நீடிப்பார்கள்,

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார்,

பொதுச் செயலாளருக்கான அனைத்து விதிமுறைகளும் ஒருங்கிணைப்பு குழுவிற்கு வழங்கப்படும்,

அ.தி.மு.க இல் எவரையும் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் ஓ.பி.எஸ். –இ.பி.எஸ் ஆகிய இருவருக்குமே முழு உரிமை உண்டு,

ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் இற்கு முழு உரிமையும் வழங்க சட்ட விதி எண் 19இல் மாற்றம் செய்தல், மற்றும் அ.தி.மு.க சட்ட திருத்ததில் சில மாற்றங்களை மேற்கொள்ளுதல்,

தினகரன் முற்று முழுதாக கட்சியில் இருந்து நீக்கம். அவர் தெரிவிக்கும் எந்த கருத்துக்களும் செல்லுபடியற்றவை. அதற்கும் கட்சிக்கும் எவ்வித சம்மதமும் இல்லை,

கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் செயற்படுவார்கள். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஏனைய மறைந்த அ.தி.மு.க கட்சி உறுப்பினர்களுக்கு இரங்கல் மற்றும் மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, ஜெயாவின் நினைவிடம் ஒன்றினை 15கோடி செலவில் அமைக்க தீர்மானித்துள்ளமையை வரவேற்று பன்னீர்ச்செல்வத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, எம்.ஜீ.ஆர் நினைவு நாளை விமர்சையாக அனுஸ்டித்தமை மற்றும் வறட்சி நிவாரணங்களை விவசாயிகளக்கு வழங்கியமை போன்ற விடயங்களுக்கு பொதுக்குழு சார்பில் தமிழக அரசிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமாகியுள்ளது அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் 10.35க்கு ஆரம்பமாகிய இப் பொதுக் குழு கூட்டம் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டத்திற்கு அதிமுக பொது குழு உறுப்பினர்களில் 95வீதமானோர்  பங்கேற்றுள்ளனர். அத்துடன் குறித்த கூட்டத்தினை நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லையென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 2 நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் டி.டி.வி தினகரன் அணியினர் ஏதேனும் கலவரத்தை உண்டுபண்ணக் கூடும் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சசிகலாவை கட்சியில் இருநது நீக்குவது குறித்து வெளிப்படையாக பேசா விட்டாளும் மறைமுகமாக சில கருத்துக்கள் தற்பொழுது முன்வைக்கப்படும் நிலையில் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg