Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யோஷித்த ராஜபக்சவிடம் மீண்டும் விசாரணை!

In இலங்கை
Published: 06:10 GMT, Sep 12, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Puvanes
yoshitha001

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வனான யோஷித்த ராஜபக்ச இன்றைய தினம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிசை, இரத்மலானை பகுதிகளில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் மற்றும் அதிசொகுசு வீடு ஒன்றினை நிர்மாணித்தமை தொடர்பிலேயே யோஷித்தவிடம் நிதி குற்றப்புலனாய்வு விசாரணைகளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலிங்கம் மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.டி. பிரியந்தவின் ஆலோசனைகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி யோஷித்த ராஜபக்சவிற்கு கொழும்பு கோட்டையில் உள்ள நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அலுவலகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg