Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நேரில் ஆஜராகுமாறு ஜக்டோ ஜியோ அமைப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு

In இந்தியா
Published: 08:02 GMT, Sep 12, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Kemasiya
download

ஜக்டோ ஜியோ அமைப்பினரை நேரில் ஆஜராகுமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச ஊழியர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என சட்டத்தரணி சேகர் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரணைக்கெடுத்த நீதிமன்றம் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

குறித்த இடைக்கால தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் நாட்டு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் அரச ஊழியர் அமைப்புக்கள் இணைந்த சங்கம் (ஜக்டோ  ஜியோ)  ஈடுபட்டமையினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சட்டத்தரணி சேகர் தாக்கல் செய்திருந்தார்.

அதை தொடர்ந்து ஜக்டொ ஜியோ அமைப்பினரை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்ரவிட்டுள்ளது. இது குறித்து நீதிமன்ற நோட்டீசை குறித்த அமைப்பினருக்கு அனுப்பி வைக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg