Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் தீர்மானம் : இராண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி

In
Published: 06:59 GMT, Sep 12, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Suganthini

பிரெக்சிற் சட்டமூலத்தின், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்போது, அரசியல், நிதி மற்றும் சட்ட உறவுகள் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவாகவே வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய பிரிந்து செல்வதற்கான, பிரெக்சிற் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த சட்டமூலம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று சுமார் 8 மணித்தியாலமாக நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டமூலத்துக்கு 326 முதல் 290 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதனையடுத்து, பிரக்சிற் சட்டமூலம் நாடாளுமன்ற நடைமுறையின் அடுத்த கட்டத்துக்குச் செல்லவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றையதினம் காலை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தச் சட்டமூலமானது நிச்சயமானது என்பதுடன், தெளிவானதாகவும் காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமரியாதைக்கு உட்படுத்துகின்றது என தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்குத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, இதற்கான வாக்கெடுப்பு கடந்த வருடம் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg