Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நிா்வாகத்தின் தீா்மானத்திற்கு எதிராக தோட்ட தொழிலாளா்கள் போராட்டம்!

In இலங்கை
Published: 07:08 GMT, Sep 12, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Puvanes

திம்புளை – பத்தனை பிரதேசப்பகுதியில் கெலிவத்தை தோட்ட மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே சுமார் 180 இற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்பதாவது தடவையாகவும் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்று சிறந்து விளங்கிய தொழிற்சாலையை காரணங்களை எதுவும் தெளிவுப்படுத்தாமல் மூடிவிட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தொழிற்சாலையினை மூடுவதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு, தோட்டத் தொழில் செயலிழந்து விடும், அதனால் தொழிற்சாலையினை மீள திறக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியுள்ளனர்.

tea_protest001 tea_protest002 tea_protest003 tea_protest004 tea_protest005

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg