Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தற்போதைய நகா்வுகள் தமிழீழத்தை நோக்கியது – விமல் திடுக்கிடும் தகவல்!

In இலங்கை
Updated: 08:01 GMT, Sep 12, 2017 | Published: 07:43 GMT, Sep 12, 2017 |
0 Comments
1792
This post was written by : Puvanes

தமிழீழத்தினை அமைத்துக் கொடுக்கும் பாதையிலேயே நாடு தற்போது பயணித்துக் கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஒரு பக்கமாக புதிய அரசியல் அமைப்பு, அடுத்த பக்கம் போர்க்குற்றம் இவை இரண்டும் ஒன்றாக இணைந்தால் தமிழீழம் உருவாவதற்கு சாதகம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விக்னேஸ்வரனின் அடுத்த இலக்கு தனித் தமிழீழமே. அதற்காகவே அவர் மாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களை வடக்கிற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் விமல் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறையிலான ஆட்சியை மட்டுமே நாம் கோருகின்றோம், தனி ஈழத்தினை அல்ல எனக் கூறிவரும் வடக்கு முதல்வர், சமஷ்டியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் தனி ஈழத்திற்கான கோரிக்கையினையே முன்வைப்பார்.

அதேபோன்று யுத்தக் குற்றச்சாட்டை உறுதிபடுத்தி தனி ஈழத்தினை அமைத்துக் கொடுக்கும் முயற்சியிலேயே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்ட விமல், இந்த அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார்.

தேசவிரோதமாக நடந்துகொண்டு வரும் இந்த அரசாங்கத்தை வீழ்த்தி, மஹிந்த தலைமையில் மீண்டும் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் எனவும் விமல் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg