Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்! 

In இலங்கை
Published: 09:20 GMT, Sep 12, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Puvanes

தலவாக்கலை ஒலிரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 150 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது, 18 கிலோ கிராமிற்கும் அதிகமான தேயிலையினை கொய்து தரும்படி வலியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தோட்டத்தின் தேயிலைக் காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியது. ஆனால் தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை நிலங்களை சுத்தம் செய்வதில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

இந்த நிலையில் நாளொன்றுக்கு 18 கிலோவிற்கும் அதிகமாக தேயிலையை கொய்து தரும்படி தோட்ட நிர்வாக அதிகாரி வலியுறுத்துகின்றார். இதன் காரணமாகவே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் தீர்க்கமான முடிவினை பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

thalavakkela001 thalavakkela002

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg