Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை!

In இலங்கை
Published: 09:29 GMT, Sep 12, 2017 |
0 Comments
1645
This post was written by : Surenth
Death

ருவான்வெல்ல – மொரலியத்த பிரதேசத்தில் மனைவியை கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக தொடர்ந்து வந்த குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கணவர் பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அந்த நபரும் வீட்டுக்கு அருகில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டுள்ளவர் 34 வயதான பெண்ணொருவர் என்பதுடன், தற்கொலை செய்து கொண்டுள்ள நபர் 35 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ருவான்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg