Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

குரங்கு பொம்மை!

In திரை விமர்சனம்
Published: 10:05 GMT, Sep 12, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Vithushagan
201709011141154385_2_kurangu-bommai-review1._L_styvpf

தஞ்சாவூரில் மிகவும் செல்வந்தராகவும், தாதாவாகவும் இருக்கும் தேனப்பனிடம் வேலை செய்து வருகிறார் பாரதிராஜா. இவரது மனைவி, மகள், மகன் விதார்த் மற்றும் ஊர் மக்கள் பலரும் பாரதி ராஜா, தேனப்பனிடம் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அவருடன் விசுவாசத்துடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், ஐந்து கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலை ஒன்று திருடப்பட்டு தேனப்பனின் கைக்கு வருகிறது. இந்த சிலையை சென்னை இராயபுரத்தில் இருக்கும் குமரவேல் மூலம் விற்க முயற்சி செய்கிறார்.

அதன்படி அந்த சிலையை குரங்கு பொம்மை உள்ள பையில் போட்டு பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். பாரதிராஜாவும் சென்னையில் கால்டாக்ஸி டிரைவராக இருக்கும் விதார்த்துக்கு தெரியப்படுத்தாமலே வருகிறார்.

தவறான ஒருத்தரிடம் இருந்தாலும், நட்பு ரீதியில் அவர் செய்த நன்மைக்காவும் அவருடன் இருக்கும் புரிதலுக்காகவும் அவருடன் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. தான் கொல்லப்பட இருக்கும் நிலையில், அவர் பேசும் நேர்மையான உரையாடலை பேசி சிலிக்க வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் பாரதிராஜா மூலம் நிறைவு பெற்றிருக்கிறது.

தேனப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நல்லவனா, கெட்டவனா என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். ரசிகர்கள் மனதில் நிற்கும் படி நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட நடித்து வரும் குமரவேல், இந்த படத்தின் மூலம், நடிப்பில் புதிய பரிமாணத்தை காண்பித்திருக்கிறார்.

தனக்கென ஒரு பாதை அமைத்து சிறந்த கதையை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த், இந்த படத்தில் நாயகன் அந்தஸ்து இல்லாமல், தந்தைக்கு ஏற்ற மகனாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகி கதாபாத்திரத்திற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் அழகாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் நித்திலன். அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பையும் யதார்த்தமாக காண்பித்திருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் கதையை விட்டு நகராமல் கொடுத்திருக்கிறார். உதயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)