Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உலக பதினொருவர் அணியுடனான தொடரை வெல்லவே விரும்புகிறேன்: சஃப்ராஸ்

In கிாிக்கட்
Updated: 10:59 GMT, Sep 12, 2017 | Published: 10:58 GMT, Sep 12, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Elakkiya
647_091217013848

உலக பதினொருவர் அணியுடனான மூன்று ரி-ருவென்ரி போட்டியிலும் வெற்றிபெறவே விரும்புவதாக பாகிஸ்தான் அணித்தலைவர் சஃப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

லாகூரில் இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சஃப்ராஸ் அஹமட், “உலக பதினொருவர் அணி சிறப்பாக உள்ளது. எனவே இந்த தொடரும் சிறப்பாக அமையவுள்ளது. எந்த அணியையும் வெல்லும் திறன்கொண்ட இளம் வீரர்களை கொண்ட அணியாகவே எமது அணியும் உள்ளது. எனவே உலக பதினொருவர் அணிக்கு எமது அணி மிகவும் சவாலாகவே அமையும் என்று நான் உறுதியாக கூறுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்க வீரர் டு பிளஸிஸ் தலைமையிலான உலக பதினொருவர் அணி பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. பிரித்தானிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் இந்த போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg