Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கரீபியனுக்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் விஜயம்

In
Published: 10:14 GMT, Sep 12, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Suganthini
irma 11

கரீபியன் பிராந்தியத்தை இர்மா புயல் தாக்கியுள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களைப் பார்வையிடுவதற்காக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்கு செல்லும் வெளிவிவகார அமைச்சர், பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

கரீபியன் பிராந்தியத்தில் அண்மையில் இர்மா புயல் தாக்கியபோது, 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் புயல் கரீபியன் பல பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிரித்தானியாவுக்குச் சொந்தமான சில பகுதிகளும் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காக படையினரையும் பிரித்தானியா அனுப்பி வைத்திருந்தது. படை வீரர்கள் 500 பேரை பிரித்தானியா அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)