Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு! – சிக்கலில் நோயாளிகள்

In இலங்கை
Published: 10:17 GMT, Sep 12, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Puvanes
mannar001

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து – மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மருத்துவக் கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான 3ஆவது நாள் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, மற்றும் தலைமன்னார், பேசாலை, முருங்கன் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

saitm001 saitm002 saitm003 saitm004

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg