Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொத்து குவித்த வழக்கில் 105 அரசியல்வாதிகள்!

In இந்தியா
Updated: 11:07 GMT, Sep 12, 2017 | Published: 11:00 GMT, Sep 12, 2017 |
0 Comments
1272
This post was written by : Kemasiya

வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் 7  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  98 சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பான ஆதாரங்களை உச்ச நீதிமன்றில் நேரடி வரி விதிப்பு வாரியம் இன்று தாக்கல் செய்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் ‘லோக் பிரகாரி’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டசபை உறுப்பினர்களின் சொத்து  எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை  ஆய்வு செய்தது. இதன் போதே குறித்த விடயம் கண்டறியப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் நேற்று குறித்த மனு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் நேரடி வரி விதிப்பு வாரியம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறியதாவது.

மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்தது. அப்போது 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  98 சட்டசபை உறுப்பினர்களின் சொத்துக்கள் கணிசமாக உயர்ந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg