Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தில் துருக்கி சைச்சாத்து

In ஐரோப்பா
Updated: 11:12 GMT, Sep 12, 2017 | Published: 11:12 GMT, Sep 12, 2017 |
0 Comments
1170
This post was written by : Suganthini

ரஷ்யாவுடனான சர்ச்சைக்குரிய ஒப்பந்தமொன்றில் துருக்கி கைச்சாத்திட்டுள்ளது.

ரஷ்யாவின் எஸ் -400 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுக்கொள்வதற்கான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்திலேயே, துருக்கி கைச்சாத்திட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இதன் வைப்புத் தொகையை அங்காரா ஏற்கெனவே செலுத்தியுள்ளது என துருக்கிய ஜனாதிபதி தையிப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ படை அணியில், அதிகளவான இராணுவத்தினரைக் கொண்ட இரண்டாவது இடத்தை துருக்கி பிடிக்கின்றது. இந்நிலையில், பொருத்தமான ஆயுதத் திட்டத்தை கொள்வனவு செய்யுமாறு துருக்கிக்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் இராஜதந்திர பிளவு ஏற்பட்டது. இருப்பினும், துருக்கிய ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான தனது சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்திய நிலையில், துருக்கியானது ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg