Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் எதிர்ப்பு பேரணி கிளிநொச்சியை வந்தடைந்தது!

In இலங்கை
Updated: 11:14 GMT, Sep 12, 2017 | Published: 11:14 GMT, Sep 12, 2017 |
0 Comments
1367
This post was written by : Vithushagan

யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட சையிட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆரம்பித்த பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியை வந்தடைந்தது.

யாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில் இன்று காலை 9.30 மணியளவில் வாகன தொடரணி புறப்பட்டு , பரந்தன் ஊடாக கிளிநொச்சி நகரை வந்தடைந்தது.

கிளிநொச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்று மாலை முறிகண்டி விநாயகர் ஆலயத்தில் இறை வழிபாடு நடைபெற்று மாலை 5மணிக்கு வவுனியா நகரை வாகன பேரணி சென்றடையவுள்ளது.

கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன தொடரணி கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர்  ”கிளிநொச்சி மாவட்டம் வறுமையில் 3ஆம் இடத்தில் உள்ளது, முல்லைத்தீவு மாவட்டம் வறுமை மாவட்டத்தில் முதலாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இங்கிருந்து யாராவது 100 இலட்சம் கொடுத்து கல்வி கற்று வைத்தியராக முடியுமா” என தெரிவித்தார்.

News (3) News (4)
News (10)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg