Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கலுக்கு கனேடிய பிரதமர் பாராட்டு

In கனடா
Updated: 11:34 GMT, Sep 12, 2017 | Published: 11:34 GMT, Sep 12, 2017 |
0 Comments
1231
This post was written by : Elakkiya

ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் மிகச்சிறந்த தலைமைப் பண்புடையவர் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பெண்களுக்கான உலக மாநாட்டில் பங்கேற்றிருந்த கனேடிய பிரதமரிடம் மெர்க்கலுடன் பணியாற்றுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே கனேடிய பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ மெர்க்கலின் சிந்தனை தீவிரமான மற்றும் அறிவுசார்ந்தது. மிகவும் சுவாரஷ்யமானவர். ஜேர்மனிய மக்கள் தீர்மானித்தால் எதிர்வரும் ஆண்டுகளிலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் எதிர்பார்த்திருக்கின்றேன். அவர் சிறந்த நண்பர்’ என்று பிரதமர் ஜஸ்ரின் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மிய தேர்தல் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக ஜேர்மனிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட மெர்க்கல் நான்காவது முறையாக இம்முறை போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg