Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ: வெளியேற்ற உத்தரவுகள் நீக்கம்

In கனடா
Updated: 11:54 GMT, Sep 12, 2017 | Published: 11:52 GMT, Sep 12, 2017 |
0 Comments
1081
icon_com
This post was written by : Elakkiya
image

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வரலாறுகாணாத காட்டுத்தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வெளியேற்ற உத்தரவுகள் நீக்கப்பட்டுள்ளன. அத்துடன் நெடுஞ்சாலைகள் யாவும் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தீ ஏற்படும் என்ற அச்சம் இன்னமும் நீங்கவில்லை என பிரிட்டிஷ் கொலம்பியாவின் விவசாய அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும் விரைவாகவோ அல்லது எளிதாகவோ இருக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மாகாணத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான காட்டுப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. சுமார் 11 ஆயிரத்து 700 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு காட்டுத்தீயில் கருகியுள்ளது.

பேரழிவின் உச்சக்கட்டத்தில் 50 ஆயிரம் பேர் தமது வீடுகளிலிருந்து வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டனர்.

கடந்த 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் 8950 சதுர கிலோ மீற்றர் பகதி நிலப்பரப்பு அழிவடைந்தது. இதுவ பிரிட்டிஷ் கொலம்பியாவின் பாரிய அழிவாக முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)