Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் சட்டமூலம் வெற்றி பெறும் – தெரேசா மே உறுதி

In
Published: 11:49 GMT, Sep 12, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Suganthini
THE

பிரெக்சிற் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் பாரிய வெற்றி கிட்டும் என்பதில் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அரசாங்கம் உறுதியாக உள்ளது என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்போது அரசியல், நிதி மற்றும் சட்ட உறவுகள் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவாகவே வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய பிரிந்து செல்வதற்கான பிரெக்சிற் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்குத் தீர்மானித்ததைத் தொடர்ந்து இதற்கான வாக்கெடுப்பு கடந்த வருடம் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)