Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளையோருக்கான மும்பை அணியில் சச்சினின் மகன்

In கிாிக்கட்
Updated: 12:37 GMT, Sep 12, 2017 | Published: 12:37 GMT, Sep 12, 2017 |
0 Comments
1648
This post was written by : Elakkiya
arjun-tendulkar_806x605_71505142413

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கரின் மகனான அர்ஜூன் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அர்ஜூன் துடுப்பாட்டத்திலும் சிறந்தவராக விளங்குகின்றார். தற்போது 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள இவர் மறைந்த ஸ்ரீ ஜே.வை. லெலே நினைவாக நடைபெறும் 5 ஆவது அனைத்திந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடவுள்ளார்.

இந்த தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பித்து 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடத்தவில்லை என்றாலும் இந்த தொடரில் அர்ஜூன் சிறப்பாக செயற்படும் பட்சத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg