Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மஸ்கெலியாவில் சனசமூக நிலையம் திறந்து வைப்பு!

In இலங்கை
Published: 12:47 GMT, Sep 12, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Vithushagan
DSC09336

மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சனசமூக நிலையம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில்  இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது ஆலய நிர்மாண பணிக்காக 1 இலட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான சீமெந்து பக்கட்டுக்கள், மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியன இதன்போது வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.இராஜாதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த சனசமூக நிலையத்தின் மூலம் இங்கு வாழும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC09325 DSC09337 DSC09354

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg