Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒஸ்கர் நாயகனுக்கு ஆந்திரா அரசு கௌரவம்!

In சினிமா
Published: 13:50 GMT, Sep 12, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Vithushagan
download (2)

ஒஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வெள்ளிவிழா நடத்த ஆந்திரா அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் திரையிசை உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இதனையொட்டி ரஹ்மானை கௌரவிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரா அரசு காக்கிநாடா பகுதியில் மிக பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த விழா ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் எனவும், அதில் அவருடன் பங்கேற்கும் கலைஞர்கள் தெரிவு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் ஆந்திர அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg