Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணாமலாக்கப்பட்டோர் விபரம் இல்லை: இரா.நெடும்செழியன்

In இலங்கை
Published: 17:13 GMT, Sep 12, 2017 |
0 Comments
1363
icon_com
This post was written by : Surenth
Balakumaran

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரத்தை சேகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி தரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடும்செழியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘காணாமல் ஆக்கப்பட்டோர்  தொடர்பான விபரத்திரட்டு மட்டக்களப்பில் இதுவரையில் இல்லை. நாங்களும் உத்தியோக பூர்வமாக எடுக்கவில்லை அதற்கு இன்னும் அரசாங்கம் அனுமதி தரவில்லை. இவ்விடையம் தொடர்பில் சரியான தகவல் திரட்டு இல்லாமல் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளது.

நிச்சயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள், அவர்களது குடும்ப பின்னணி அவர்களுக்கு வீடு இருக்கின்றதா, வாழ்வாதாரத்திற்கு உதவிகள் தேவையா, உள்ளிட்ட விடையங்கள் அடங்கலான விபரங்கள் இருந்தால்தான் அந்தக் குடும்பங்களுக்கு நாமும் உதவிகளைச் செய்யலாம்.

எமக்கு நேரடியாக விண்ணப்பித்த 276 காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளையும், வாழ்வாதார வசதிகளையும் நாம் செய்து கொடுத்துள்ளோம்.’ என இரா.நெடும்செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg