Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எகிப்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 18 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

In உலகம்
Published: 17:25 GMT, Sep 12, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Surenth
ISIS

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்த வாகனங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை இலக்கு வைத்து பாதையின் இரு பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததன் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே அதிகமான பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் ஆயுத வாகனங்கள் சென்ற பாதையை இடைமறித்து வாகனம் ஒன்று சென்றதன் பின்னரே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் எகிப்திய பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)