Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரகாண்டில் நிலச்சரிவு: மக்கள் வெளியேற்றம்

In இந்தியா
Published: 04:05 GMT, Sep 13, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
landslides_0

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் அடை மழை காரணமாக, உத்தர்காசி பகுதியிலுள்ள மலைத்தொடர்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

மழை தொடரும் பட்சத்தில் குறித்த பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மலைப்பாங்கான உத்தரகாண்டில் அடிக்கடி இவ்வாறு நிலச்சரிவு ஏற்படுவதோடு, கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg