Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இணைகிறார் நெதர்லாந்தின் பிரபல வீரர்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:26 GMT, Sep 13, 2017 | Published: 05:26 GMT, Sep 13, 2017 |
0 Comments
1405
This post was written by : Anojkiyan

இந்தியாவில் நடைபெறும் கால்பந்து திருவிழாவான இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் விளையாட, நெதர்லாந்து கால்பந்து அணியின் பிரபல வீரரான கிரேகோரி நெல்சன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இத்தொடரில், சென்னையின் எப்.சி. அணிக்கு விளையாட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து 29 வயதான நெல்சன் கூறுகையில், ‘ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நெதர்லாந்தை சேர்ந்த என் நண்பர்கள் பலரும் விளையாடி இருக்கிறார்கள். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக என்னிடம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

கால்பந்து போட்டி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் பங்கெடுப்பதுடன், சென்னையின் எப்.சி. அணி மீண்டும் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்கிறேன்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg