Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வெளியீட்டுக்கு முன்னரே 2.5 இலட்சம் பேர் முன்பதிவு செய்த அதி நவீன ஸ்மார்ட்போன்!

In வணிகம்
Published: 05:08 GMT, Sep 13, 2017 |
0 Comments
3935
icon_com
This post was written by : Puvanes
note8

சாம்சுங் நிறுவனம் அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கியுள்ள புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டபோது அமெரிக்கா மற்றும், தென்கொரியாவில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட் போனை முன்பதிவு செய்வோருக்கு, ஒரு முறை இலவசமாக திரையை மாற்றிக்கொள்ளும் வசதி தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடன் அட்டை மூலமான கொள்வனவின் போது 4000 ரூபாய் பணப்பரிசும், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 448 ஜபி வரை இணைய பாவனை சேவையும் வழங்கப்பட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் குறித்த தொலைபேசி வெளியீட்டுக்கு முன்னரே 2.5 இலட்சம் பேர் முன்பதிவினையும் செய்திருந்தனர்.

இந்தநிலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட்8 இன் விலை 67900 இந்திய ரூபாயில் இருந்து ஆரம்பமாவதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இதன் விற்பனை ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)