Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்ரோங்கின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Published: 05:34 GMT, Sep 13, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங்கின் தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலாவது ஆர்ப்பாட்ட பேரணியானது தெற்கில் மார்செய்ல் (Marseille), பேர்பிக்னன் (Perpignan) மற்றும் நீஸ் ஆகிய இடங்களிலும் மேற்கில் போர்டோக்ஸிலும் (Bordeaux) வடக்கில் லே ஹவ்ரே (Le Havre) மற்றும் கென் (Caen) ஆகிய இடங்களிலும் இடம்பெற்றது. லியொனில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை பரிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணாடி விளம்பரப் பதாகை தூக்கி எறியப்பட்ட நிலையில் பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களில் பொலிஸாருக்கும் எதிர்ப்பு அமைப்பாளர்களுக்கும் இடையில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் பேர்  பங்கேற்றிருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள போதிலும் இதைவிட அதிகளவானோர் பங்கேற்றிருந்ததாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறிருக்க நாடெங்கிலும் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் இடம்பெற்றுள்ள இத்தகைய போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோங்கிற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg