Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நெட்டிஷன்’களால் கடுப்பான ‘மழை’ நாயகி

In கிசு கிசு
Published: 07:18 GMT, Sep 13, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Varothayan
shriya_saran_saree-HD

பார்ட்டிகள், அரைகுறை ஆடைகளுடனான போஸ்கள் என அடிக்கடி பரபரப்பாக பேசப்படும் ‘மழை’ நாயகி தாராள மனதுடையவர். அந்த தாராளத்தை அவர் எந்தவொரு வஞ்சகமும் இன்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களுக்கு வழங்கி வருபவர்.

அவர் அண்மையில் படு கவர்ச்சியாக ஒரு படத்தை தனது ருவிட்டர் பக்கத்தில் அண்மையில் பிரசுரித்திருக்கிறாராம். உடனே இணையத்தில் உலாவரும் ‘நெட்டிஷன்கள்’ கலாசார காவலர்களாக மாறி அவரை வறுத்தெடுத்து விட்டார்களாம்.

கடுப்பாகிப் போன நாயகி, ‘சேலை அணிந்தால் உடனே பாரம்பரியம் என்கின்றனர். மொடேன் உடை அணிந்தால் ஆபாசம் என அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். உண்மை என்னவென்றால் இரண்டிலும் அதற்கான அழகு இருக்கிறது. அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது’ என யாரிடமோ பொங்கியிருக்கிறாராம்.

இது போதாதென்று, ‘என்றைக்கும் நாங்கள் (நடிகைகள்) நாங்களாகவே இருக்கிறோம். வித்தியாசம் என்பது உங்கள் கண்களில் தான் இருக்கிறது’ எனவும் நடிகை இணையப் போராளிகளை வறுத்தெடுத்திருக்கிறாராம்.

கருவாட்டுப்பானையைத் திறந்து வைச்சா பூனை தின்னவோ, தூக்கிக்கொண்டு ஓடவோ பார்க்கும் தானே! இதுக்கெல்லாமா கடுப்பாகிறது?

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg