Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தியாவின் நம்பர் ஒன் எதிரி அவுஸ்ரேலியா!

In கிாிக்கட்
Published: 05:59 GMT, Sep 13, 2017 |
0 Comments
1714
icon_com
This post was written by : Anojkiyan
koh

கிரிக்கெட் உலகில் இந்தியாவின் நம்பர் ஒன் எதிரி அவுஸ்ரேலியா அணி தான் என இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வி.வி.எஸ்.லக்ஷமண் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கிடையில் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடர் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இரு அணிகளுமே கடினமாக போராடிக்கூடியது. இந்த தொடரிலும் அதில் வித்தியாசம் இருக்கப்போவதில்லை. கோஹ்லியும், ஸ்டீவ் ஸ்மித்தும் நவீன கால கிரிக்கெட்டில் சிறந்தவர்கள். அவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முன்உதாரணமாக அமைந்திருக்கிறது. களம் இறங்கி விட்டால் வெற்றி மட்டுமே நோக்கம். இங்கு நட்பாக இருக்க வேண்டிய தேவையே இல்லை. இருவரும் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றிக்காக முயற்சிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்ளும் போது போட்டி கடுமையாக இருக்குமே தவிர, நட்புக்கு இடம் இருக்காது.

கோஹ்லியும், ஸ்டீவ் ஸ்மித்தும் இளம் வீரர்கள். ஆனால் டெஸ்ட் தொடரின் போது ஸ்மித்தின் அணித்தலைமை மெச்சும்படி இல்லை. டோனி போன்ற வீரர்கள் அணியில் இருப்பது கோஹ்லிக்கு சாதகமான அம்சமாகும். முன்மாதிரியாக இருக்கும் கோஹ்லியே, தற்போதைய கட்டத்தில் ஸ்மித்தை விட சிறந்த அணித்தலைவர் ஆவார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும். அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது” என கூறினார்.

அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)