Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா சுற்றுலாத்தளத்தில் சோதனை நடவடிக்கை

In ஐரோப்பா
Updated: 05:52 GMT, Sep 13, 2017 | Published: 05:52 GMT, Sep 13, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Elakkiya
_97778900_df00cf9e-2d5a-4cf8-8961-480156a86e5c

ஸ்பெய்னின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக பார்சிலோனாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயமான சக்ராடா ஃபமீலியா (Sagrada Familia) உட்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த தேவாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு அகற்றும் படைப்பிரிவினருடன் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்பெய்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த பகுதியிலிந்து வெடிகுண்டு எவையும் கைப்பற்றப்படவில்லை.

சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் அருகிலுள்ள கடைகள் யாவும் பூட்டப்பட்டன.

பார்சிலோனாவில் கடந்த மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் மேற்படி தகவல் மேலும் பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg