Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித மாமிசம் உண்ட விவசாயிகள்! – மரணிக்கப் போவதாக கடைசி எச்சரிக்கை

In இந்தியா
Updated: 07:04 GMT, Sep 13, 2017 | Published: 06:04 GMT, Sep 13, 2017 |
0 Comments
1241
This post was written by : Puvanes

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்றைய தினம் மனித மாமிசத்தை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நதிகளை இணைத்தல், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த யூலை 16ஆம் திகதி முதல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்றாடம் புதுப்புது வகையில் போராட்டங்களைத் தொடரும் அவர்கள் எலிகளை உண்ணல், மணலில் புரளுதல், அரைநிர்வாணத்துடன் ஊர்வலம் வருதல், என பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று, மனித மண்டை ஓடு மற்றும் கை, கால் எலும்புத் துண்டுகளுடன் ஊர்வலமாக வந்து மனித மாமிசத்தை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தெருவில் உறங்கி போராட்டம் நடத்தும் எங்களை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் எங்களைப் பார்க்க மறுத்தால் நாம் ஜனாதிபதியை சந்திக்கப் போவதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியிடம் மரணிப்பதற்காக அனுமதி வேண்டும் என்ற மனுவைக் கொடுத்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg