Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சையை ஏற்படுத்திய கால்பந்து போட்டியை மீண்டும் நடத்த தென்னாபிரிக்கா சம்மதம்

In உதைப்பந்தாட்டம்
Published: 06:28 GMT, Sep 13, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Anojkiyan
pen

பெரும் சர்ச்சையை தோற்றுவித்த தென்னாபிரிக்கா மற்றும் செனகல் அணிகள் மோதிய கால்பந்து போட்டியை மீண்டும் நடத்த தென்னாபிரிக்கா கால்பந்து சம்மேளனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னாபிரிக்கா கால்பந்து சம்மேளனம் கூறுகையில், ”இந்த போட்டியில் மோசடி நடந்திருந்தால் நாங்கள் கட்டாயம் மீண்டும் போட்டியை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிஃபா உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் செனகல் அணிகள் மோதியது.

இப்போட்டியின் முதல் பாதி நேரத்தின்போது செனகல் வீரரின் கையில் பந்து பட்டதாக தென்னாபிரிக்கா அணியினருக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்தி தென்னாபிரிக்கா கோல் அடித்து 2-1 என வெற்றி பெற்றது.

இதனால் கடும் அதிருப்தியடைந்த செனகல் அணி, பிஃபாவிடம் முறையீடு செய்தது. இதனை விசாரணை செய்த பிஃபா விசாரணைக்குழு நடுவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதனை உறுதிசெய்தது. இதனால் அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg