Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரக்தி நிலையில் இன்றைய இளைஞர் சமுதாயம்!- காரணம் என்ன?

In இலங்கை
Updated: 06:29 GMT, Sep 13, 2017 | Published: 06:29 GMT, Sep 13, 2017 |
0 Comments
1221
icon_com
This post was written by : Elakkiya
IMG_1773

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான இளைஞர் யுவதிகள் விரக்தி நிலையில் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வட்டக்கச்சி பிரதேசத்தில் விளையாட்டுக்கழக இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போது மேற்படி தெரிவித்த அவர் வேலைவாய்ப்பின்மையே அவர்களின் விரக்தி நிலைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் தொழில் வாய்ப்பின்றி மிகவும் விரக்தியான மனநிலையில் காணப்படுவதனை அவர்களின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகின்றது. தொழில் வாய்ப்பின்மை எதிர்காலத்தை பாதிக்கின்றது என்ற பெரும் ஏக்கம் அவர்களை மனதளவில் வதைக்கின்றது.

இளம் சமூகத்தின் இந்த மனநிலை மிகவும் மோசமானது என்பதுடன் இது நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இளம் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது ஆனால் எங்களுடைய பிரதேசங்களில் இளம் சமூகத்தினர் தொழில் வாய்ப்பின்றி இருப்பது துரதிஸ்டவசமானது”  என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிளிநொச்சியில் அமையப்பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 5 ஆயிரம் வரையிலான யுவதிகள் பணியாற்றுவதாக குறிப்பிட்டுள்ள சந்திரகுமார் இதுபோன்ற பல தொழிற்சாலைகள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதுடன் அதற்கு அதிகாரத்தில் உள்ள அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி இளம் சமூகத்தில் தொழில் வாய்ப்பின்மையால் ஏற்படுகின்ற விரக்தியான மனநிலை பல்வேறு சமூக சீரழிவுகளையும், சமூகவிரோத செயல்களையும் ஊக்குவிப்பதாகவே அமையும் எனவே அவற்றை கருத்தில் எடுத்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg