Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் போட்டியில் கோஹ்லியும் டெஸ்டில் ஸ்மித்துமே சிறந்த வீரர்கள்: ஆஸி வீரர் கணிப்பு

In கிாிக்கட்
Published: 07:13 GMT, Sep 13, 2017 |
0 Comments
1448
icon_com
This post was written by : Anojkiyan

ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லியும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்துமே சிறந்த வீரர்கள் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்தியா-அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த சில மாதங்களாக அவுஸ்ரேலியாவின் விளையாட்டு சீரற்றதாக இருக்கிறது. தங்கள் அணி உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக திகழ வேண்டும் என்று அவுஸ்ரேலிய இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு நாள் தொடரை அவுஸ்ரேலியா அணியால் வெல்ல முடிந்தால் அதுவும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால், ஒரு நாள் போட்டி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை அடைய முடியும். அதற்குரிய அருமையான வாய்ப்பு ஸ்டீவ் ஸ்மித்துக்கு உருவாகியுள்ளது.

பெரும்பாலான அவுஸ்ரேலிய வீரர்கள் இந்திய மண்ணில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்களுக்கு இது 2வது தாய்நாடு போன்றது. இங்குள்ள சீதோஷ்ண நிலை நன்கு தெரியும். எனவே ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் எங்களது வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg