Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கம்போடியாவில் தடுக்கப்பட்ட நினைவுதின நிகழ்வு

In உலகம்
Published: 06:54 GMT, Sep 13, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Suganthini

கம்போடியாவில் 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேனைட் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்படவிருந்த நினைவுதின நிகழ்வை பிரதான எதிர்க்கட்சி தடை செய்துள்ளது.

கம்போடியாவின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மீட்புக் கட்சியின் தலைவரான கெம் சோகா (Kem Sokha) செப்டெம்பர் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்த நிகழ்வை எதிர்க்கட்சியினர் தடை செய்துள்ளனர்.

1997ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி நடத்தப்பட்ட அரசியல் பேரணியொன்றில் கலந்துகொண்டவர்கள் மீது கிரேனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 16 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இவர்களை நினைவுகூர்ந்து கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னில் இன்று (புதன்கிழமை) நினைவுதின நிகழ்வு நடத்தப்படவிருந்தது.

மேலும், பிரதமர் ஹுன் சென் (Hun Sen)  தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அமெரிக்காவுக்கு உதவி செய்கின்றார்  என்ற குற்றசாட்டின் பேரில் கம்போடியாவின் தேசிய மீட்புக் கட்சியின் தலைவரான கெம் சோகா (Kem Sokha)  செப்டெம்பர் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg